போலீஸாக அமலா பால்… சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வெப் சீரிஸின் டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு வந்தது.

தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். சயின்ஸ்-ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கியுள்ளார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறாராம்.

Amala Paul's Sci Fi Crime Thriller Web Series Teaser1

மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடித்துள்ளார். தற்போது, இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் இவ்வெப் சீரிஸின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வருகிற ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்

Share.