ஓ.டி.டி -யில் ராக்கெட்ரி படம் எப்பொழுது வரும் ?

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராக்கெட்ரி . நடிகர் மாதவன் கதாநாயகனாகவும் நடிகை சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள் . சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நடிகர் ஷாருக் கான் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் மேலும் நடிகர் சூர்யா தமிழ் மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் . இருவரும் இந்த சிறப்பு தோற்றத்தில் பணம் வாங்காமல் நடித்துள்ளார் .

இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி அவர்களின் கதை . இந்த படத்தில் நம்பி அவர்களின் 27வது முதல் 75 வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்து உள்ளனர் .இந்த படம் கொரோனா காரணத்தினால் தொடர்ந்து திரையரங்கில் வெளியாவதில் தாமதமாகி வந்தது .


இந்நிலையில் ராக்கெட்ரி படம் ஜூலை 01-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி இருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற ஜூலை 26 -ஆம் தேதி அமேசான் நிறுவனம் தங்களது ஓ.டி.டியில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது .

Share.