சீக்ரெட் சொன்ன அமீர் & பாவ்னி

  • January 21, 2023 / 06:31 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

இது ஒரு பக்கம் இருக்க துணிவு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவ்னி நடித்து இருந்தனர் . சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர்கள் துணிவு படத்தின் கதை என்னவென்று எங்களுக்கு தெரியாது அஜித் சார் படம் என்று சொன்னவுடன் இருவரும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus