Maayavalai : அமீர் – சத்யா இணைந்து நடித்துள்ள ‘மாயவலை’… டீசர் விமர்சனம்!

  • December 9, 2023 / 02:40 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் அமீர். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘மாயவலை’. இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை அமீரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அமீர் பிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரித்துள்ளார். இன்று இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus