‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான நடிகை அம்ரிதா ஐயர். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘லிப்ட்’, தெலுங்கில் ’30 ரோஜுல்லோ ப்ரேமிஞ்சதம் எலா’, ‘ரெட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் ஒரு புதிய மியூசிக் வீடியோவில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘இட்லி சட்னி’ என இந்த மியூசிக் வீடியோவிற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்பாடலுக்கு இசையமைத்ததுடன், வீடியோவில் நடிகை அம்ரிதா ஐயருடன் இணைந்து நடனமாடியுள்ளார். ‘அதே கண்கள்’ பட இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இந்த மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளாராம்.
இப்பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லியோ ஜான் பால் படத்தொகுப்பாளராகவும், எஸ்.கமலநாதன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். நேற்று இரவு 7 மணிக்கு இந்த மியூசிக் வீடியோவின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. முழு பாடல் வீடியோவை நாளை (டிசம்பர் 3-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Here is #IdliChutney
Promo – First Single from #ThinkOriginals
– A Song by @RSeanRoldan https://t.co/D0yi5wHgT7#RajuSundaram @rohinv_v @dineshkrishnanb@leojohnpaultw @meena_ramprasad @imkirankumar pic.twitter.com/Y0nRCsthUE
— Amritha (@Actor_Amritha) December 1, 2020