அஸீமுடன் மீண்டும் பிரச்சனை செய்யும் அமுதவாணன் !

  • November 30, 2022 / 05:23 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக அசீம் செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டில் வசிக்கும் மக்கள் இடையே நடக்கும் போட்டி நடந்து வருகிறது . அசீம் கேப்டன் ஆன பிறகு வீட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் . குறிப்பாக சமைக்கும் அணியில் வாரம் வாரம் இருந்த நபர்களை மாற்றி உள்ளார் .

இந்நிலையில் பிக் பாஸ் 6 இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ சற்று விறுவிறுப்பை கூட்டி உள்ளது என்று தான் கூறவேண்டும் அஸிமுடன் விக்ரமன் மற்றும் அமுதவாணனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது . மூவரும் கடுமையாக வாக்குவாதம் செய்து உள்ளனர் . அஸிமை ரவுடிதனம் செய்கிறீர்கள் என்று விக்ரமன் மற்றும் அமுதவாணன் கூறுகிறார்கள் . ஒரே அணியில் விளையாடும் அஸீம் மற்றும் விக்ரம் சண்டை போட்டு கொள்வது ரசிகர்களுக்கு அதிரியாகி உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus