உண்மை முகத்தை வெளிப்படுத்துவாரா ரட்சித்தா ?

  • January 4, 2023 / 01:29 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் ஏ.டி.கே . மேலும் நாமினேஷன் ப்ரீ பாசை அஸிம் வென்றுள்ளார் . இதனால் இந்த வாரம் வீட்டார் இவரை நாமினேட் செய்ய முடியாது .

இது ஒரு பக்கம் இருக்க இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தற்போது தொடங்கி உள்ளது . இதில் அமுதவாணன் 19 டைல்ஸ் வென்று முதலிடத்தில் உள்ளார் . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் ரட்சித்தாவை அமுதவாணன் மற்றும் ஏ .டி .கே வம்புக்கு இழுக்கின்றனர் .

எப்போதும் அமைதியாக செல்லும் ரட்சித்தா கோபப்படுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus