‘ஓப்பன்ஹெய்மர்’ சிலியன் மர்ஃபி சார் நீங்களா?… எமி ஜாக்சன் ஸ்டில்லை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

  • September 21, 2023 / 06:43 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் எமி ஜாக்சன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மதராசபட்டினம்’. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

‘மதராசபட்டினம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0’ என தமிழ் படங்கள் குவிந்தது.

எமி ஜாக்சன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் கைவசம் ‘மிஷன் சேப்டர் 1’ என்ற தமிழ் படம் மட்டும் இருக்கிறது.

இதில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்லில் எமி ஜாக்சன், ‘ஓப்பன்ஹெய்மர்’ ஹாலிவுட் படத்தின் ஹீரோ சிலியன் மர்ஃபி போல் இருக்கிறார் என ரசிகர்கள் கமென்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus