2010 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் “மதராசபட்டினம்”. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஏமிஜாக்சன் நடித்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான “ஐ” படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார் எமி ஜாக்சன். இந்த படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
தற்போது எமி ஜாக்சன் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாக இருக்கிறார். தன் குழந்தையின் மேல் முழு கவனத்தையும் செலுத்தி வரும் எமி ஜாக்சன் சினிமாவிலிருந்து தற்சமயம் விலகியிருக்கிறார்.
தன் குழந்தையின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி உள்ள எமிஜாக்சன் அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தன் குழந்தை பிறந்த நாளன்றும் மிக கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் எமிஜாக்சனை பல நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.