இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே சிவம் திரைப்படம், ரசிகர்களிடையே அதன் கருத்து சிறப்பிற்காக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மதன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், நாசர், கிரன்ரத்தோட், சந்தானபாரதி, சீமா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் ஆர்தூர்.ஏ.வில்ஷன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியிருந்தது. இந்த படத்தில் ‘நல்லசிவம்’ மற்றும் ‘அன்பரசு’ ஆகிய கதாபாத்திரத்தின் மூலம் சமூதாயத்திற்கு தேவையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுந்தர். சி.
2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்கு ஐஎம்டிபி 8.8 என்ற மதிப்பீட்டை தந்துள்ளது. தமிழ் படங்களில், இப்படத்திற்கு தான் ஐஎம்டிபி அதிக ரேடிங் கொடுத்துள்ளது.
இந்த படத்தின் திரைக்கதை வசனத்திற்காகவும், படத்தின் ஒளிப்பதிவிர்காகவும் ஐஎம்டிபி அதிக மதிப்பீடு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமுதாய கருத்தை வெளிப்படுத்தும் முழு நோக்கத்துடனே உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.
வாழ்க்கை பற்றிய இரண்டு வேறு கருத்துக்களை கொண்ட இருவர் புவனேஸ்வரிலிருந்து சென்னைக்கு ரயிலில் ஒன்றாக பயணம் செய்வார்கள் அவர்களுக்கு இடையே நடக்கும் கதையே இப்படத்தின் கதைக் கருவாகும்.
இந்தப் படத்தில் கமலஹாசன் நடிப்பிற்காக இன்றும் பெரிதும் பாராட்டப்படுகிறார். நடிகர் மாதவனும் அவரது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார். ரசிகர்களிடையே இன்றும் நீங்காத இடம் பிடித்த இந்த படத்திற்கு ஐஎம்டிபி அதிக ரேட்டிங்கை தந்துள்ளது சிறப்பம்சமாகும்.