தொலைக்காட்சியில் 15 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வளம் வருபவர் திவ்ய தர்ஷினி என்கிற டிடி. சிறுவயதிலிருந்தே தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த டிடி விஜய் டிவியின் ஜோடி No 1-இன் மூலமாக 2006 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
பின்பு விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வந்தார். இந்நிலையில் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வர தொடங்கியது. சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றார். தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் அவர் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்க அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது. திரையுலக நட்சந்திரங்கள் தங்களது லாக்டவுனை எவ்வாறு கழிக்கிறோம் என்று சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர். டிடியும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். ஆனால் கடந்த சில நாட்களாகவே அவரிடம் இருந்து எந்த ஒரு பதிவும் இல்லாத நிலையில் நேற்று ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார். அதில் அவரது இடது முழங்காலில் கட்டு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து டிடி கூறுகையில் தனது முழங்கால் எலும்பில் எதிர்பாராத விதமாக முறிவு ஏற்பட்டதாகவும், தான் அதிலிருந்து மீண்டு குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனது முழங்காலில் ஏற்பட்ட முறிவால் பயங்கர வலியை அனுபவித்ததாகவும், அதிலிருந்து தன்னை திசை திருப்ப எழுதுவது, OTT ல் படங்களை பார்ப்பது என்று தனது பொழுதை கழிப்பதாக கூறியுள்ளார்.ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை என்பதால் இதனை பதிவிடுகிறேன், விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.