OTTயில் வெளியாகவுள்ள “அண்டாவ காணோம்” திரைப்படம்!

  • August 26, 2020 / 08:03 PM IST

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

இந்நிலையில் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தற்போது சி.வேல்மதி இயக்கத்தில் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் “அண்டாவ காணோம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜேஎஸ்கே பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் முனீஸ்காந்த், வினோத் முன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கியமான இடத்தை ஏற்றுள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் யூடியூப்பில் வெளியாகி மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படம் ஒரு காமெடி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://youtu.be/eXkxdgWyY10

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus