‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஆண்ட்ரியா.
அதன் பிறகு ‘மங்காத்தா, விஸ்வரூபம், உத்தம வில்லன், தரமணி, வடசென்னை’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘மாஸ்டர், வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, இந்த லாக் டவுன் டைமில் ஆண்ட்ரியா என்ன பண்றாங்கன்னு தெரியுமா?.. ‘தி ஐஸ் அட் தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தை படித்து முடித்திருக்கிறாராம். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.