புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ‘அங்காடித் தெரு’ பட நடிகை சிந்து காலமானார்!

  • August 7, 2023 / 01:11 PM IST

தமிழில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன் இயக்கியிருந்தார். இதில் மகேஷ், அஞ்சலி ஹீரோ – ஹீரோயினாக நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சிந்து. இவர் இப்படத்துக்கு பிறகு சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்து கொண்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சிந்து புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பின், இவர் சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டார். சில திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு பணம் உதவியும் செய்தனர்.

தற்போது, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus