குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் அனிகா சுரேந்திரன். மலையாள திரையுலகத்தில் அறிமுகமான இவர் தமிழிலும் பின்னர் நடிக்கத்தொடங்கினார்.
மலையாள திரையுலகில் வெளிவந்த “சோட்டா மும்பை” படத்தில் நடிப்பை தொடங்கிய இவர், குழந்தை நட்சத்திரமாக நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் “கத தொடருன்னு”. 2010ஆம் ஆண்டு சத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.
தொடர்ந்து ஃபோர் பிரண்ட்ஸ், ரேஸ், 5 சுந்தரிகள், நயனா ஆகிய மலையாள படங்களில் நடித்த அனிகா, 2015 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழில் புகழ் பெற்ற இவர், பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “நானும் ரவுடிதான்” படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “மிருதன்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விசுவாசம்” படத்தில் நடித்தார்.
பின்பு “குயின்” எனும் அமேசான் வெப்சீரிஸில் சிறுவயது ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்தார் அனிகா சுரேந்திரன். இப்படி பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும், இவரின் அசத்தல் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இவர் அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “மாமனிதன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.