தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் ‘என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம், மாமனிதன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
அனிகா சுரேந்திரன் இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ‘புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதில் ஹீரோவாக மெல்வின்.ஜி.பாபு நடிக்க, இந்த படத்தை ஆல்ஃப்ரெட்.டி.சாமுவேல் இயக்கியிருந்தார்.
இப்போது அனிகா சுரேந்திரன் நடிப்பில் இரண்டு தமிழ் படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.