தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் ‘என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம், மாமனிதன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
அனிகா சுரேந்திரன் இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ‘புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
சமீபத்தில் ரிலீஸான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்துள்ள புதிய மலையாள படமான ‘ஓ மை டார்லிங்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதில் ஹீரோவாக மெல்வின்.ஜி.பாபு நடிக்க, இந்த படத்தை ஆல்ஃப்ரெட்.டி.சாமுவேல் இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லரில் ஹீரோவுக்கு அனிகா சுரேந்திரன் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.