கண் கலங்கிய அனிருத் !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் படத்தில் சூர்யா நடித்து இருந்தாலும் படக்குழு அவரது தோற்றத்தை வெளிப்படுத்தவில்லை தொடர்ந்து அதை ரகசியமாக வைத்து இருந்தார்கள் . இந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக பதிவிட்டு இருந்தது. நடிகர் சூர்யாவின் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது

இந்நிலையில் நடிகர் அனிருத் படத்தை பார்த்துள்ளார்.விக்ரம் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படம் பார்த்த பொழுது
லோகேஷ் கனகராஜிடம் கண்கலங்கி விட்டேன் . அந்த அளவிற்கு கமல் சாரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

Share.