‘ஐத்தலக்கா’- வெளியாகவுள்ள அனிருத்தின் குத்து பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தற்போது திகழ்பவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர். இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு இவரது ரசிகர்களும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

இவர் பிறந்தநாள் கொண்டாட்டமாக மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அனிருத் பாடிய பாடல் ஒன்று விரைவில் வெளியாகும் என்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஜெய் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் “வேட்டைநாய்” என்ற திரைப்படத்தில் கணேஷ் சந்திரசேகரன் இசையமைப்பில் அனிருத் ரவிச்சந்தர் “ஐத்தலக்கா” என்ற பாடலை பாடியுள்ளார் என்றும், இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று தற்போது இந்த திரைப்படக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சுபிக்ஷா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.