பீஸ்ட் படத்தை பார்த்த அனிருத் ! என்ன சொன்னார் தெரியமா?
April 7, 2022 / 02:39 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் . இவர் இயக்கிய கோலமாவு கோகிலா , டாக்டர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தன . டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் . இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது . இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தையும் நெல்சன் தான் இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு மகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது . பீஸ்ட் படத்தின் வெளியீட்டுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது . அந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் . நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் , பீஸ்ட் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் 10 வருடுங்களுக்கு மேலாக நண்பர்களாக உள்ளனர் . இந்த நிலையில் நெல்சன் ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார் . தான் இயக்கும் அனைத்து படங்களையும் அனிருத் தான் முதலில் பார்ப்பார் என்று கூறி இருக்கிறார்.
எனவே பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்களுக்கு முன்னதாக அனிருத் படத்தை பார்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது .படத்தை பார்த்துவிட்டு அனிருத் படத்தை மிகவும் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.