‘பிக் பாஸ் 4’ : “தைரியம் இல்லாம போறேன்னு ஏன் சொல்றீங்க?”… ரியோ – அனிதா இடையே மோதல்!

  • December 14, 2020 / 03:06 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக் மற்றும் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் ரியோ ராஜ் “அனிதா தனி ஆளா நின்னு சமைச்சேன் அப்படின்னு சொல்லி ரொம்ப ஆக்ரோஷமா வெளிப்படுத்துனாங்க. அவங்க கேட்டிருந்தாங்கன்னா கண்டிப்பா வேலை செஞ்சிருப்பாங்க. இதை நான் பதிவு பண்ணனும்னு நினைச்சேன்.

ஆனா, இந்த காரணத்துக்காக நான் அனிதாவை நாமினேட் பண்ணல” என்று சொல்கிறார். பின், அனிதா சம்பத் ரியோவை அழைத்து “ரியோ உங்களுக்கு என்னதான் பேசணும்னாலும் என்கிட்டையே பேசலாமே. அங்க நின்னா பதில் சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு பேசுனீங்களா” என்று கேட்கிறார். அதற்கு ரியோ “actually உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன் நான்” என்று சொல்லி அங்கிருந்து நடந்து செல்கிறார். பின், அனிதா “ஏன் தைரியம் இல்லாம போறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு ரியோ “what do you mean?” என்று சொல்கிறார்.

பின், அனிதா “ஆமா ஏன் பேசுறதுக்கு தைரியம் இல்லாம போறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு ரியோ “தைரியம் இல்லைங்குற வார்த்தைலாம் இங்க வச்சுக்காதீங்க” என்று சொல்கிறார். பின், அனிதா “நீங்க அப்படிதான் இப்போ நடந்து போறீங்க” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “நான் இங்கதான் இருக்கேன். எங்க தைரியம் இல்லாம நான் கதவை தாண்டியா வெளியே போயிட்டேன்” என்று கத்தி பேசுகிறார். பின், அனிதா “ஏன் கத்துறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு ரியோ “தைரியம் இல்லாம போறேன்னு சொல்றீங்க. பார்த்து பேசுங்க” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus