அஞ்சலி நடித்த பிரபல பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்!

  • September 2, 2020 / 01:52 PM IST

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான “பிங்க்” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ஏற்கனவே தமிழில் “நேர்கொண்டபார்வை” என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்திருந்த இடத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

இந்த படத்தை போனிகபூர் மீண்டும் தயாரிக்கிறார். பாலிவுட்டில் டாப்ஸி நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிப்பதாகவும், மேலும் கிருத்தி குல்காரி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடிப்பதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படத்தை “வக்கில் ஷாப்” என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். போனி கபூருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்எஸ் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நாளை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்போவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை நடிகை அஞ்சலியும் ஷேர் செய்துள்ளார்.

https://twitter.com/yoursanjali/status/1300640301997084673?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus