சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவா. தமிழில் சிவா இயக்கிய முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அது தான் ‘சிறுத்தை’. இதில் கதையின் நாயகனாக கார்த்தி நடித்திருந்தார். ‘சிறுத்தை’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ என படங்கள் இயக்கினார். இந்த நான்கு படங்களிலும் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்தது தான் ஹைலைட். இதன் காரணமாகவே சிவா டக்கென டாப் இயக்குநர்களின் லிஸ்டில் இடம்பிடித்து விட்டார்.
இப்போது இயக்குநர் சிவா தனது கேரியரில் அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். அது தான் ‘அண்ணாத்த’. இந்நிலையில், நேற்று (நவம்பர் 27 -ஆம் தேதி) உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.