சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மொழியில் இசையமைத்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடையது தான். அது தான் ‘தமிழன்’. இயக்குநர் மஜீத் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு டி.இமானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘விசில், கிரி, தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், மாசிலாமணி, மைனா, மனம் கொத்திப் பறவை, சாட்டை, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரம்மி, ஜீவா, ரஜினி முருகன், டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை, டெடி, அண்ணாத்த’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டி.இமான். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 29-ஆம் தேதி டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்போது டி.இமான் ‘கேப்டன், எதற்கும் துணிந்தவன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம்’ ஆகிய ஐந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமானின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.