வெளியானது லைக்கா நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு !

  • November 11, 2022 / 01:14 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் லைக்கா நிறுவனம் தற்போது புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது . சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்க உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க தற்போது மேலும் ஒரு புதிய படத்தின் முதல் பார்வையை பகிர்ந்து உள்ளது படக்குழு. அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு பட்டது அரசன் என்று தலைப்பு வைத்துள்ளனர் . ராஜ்கிரண் மற்றும் ராதிகா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை சற்குணம் இயக்கி வருகிறார் . ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus