தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து
இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார் .
மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் ரஜினி பிறந்த நாளில் வெளியாகிறது .
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படமும் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மீண்டும் பி.வி .ஆர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது . ஏற்கனவே ரஜினி நடித்த பாபா படம் வெளியாக உள்ளது ரஜினி ரசிகர்கள் டபுள் உற்சாகத்தில் உள்ளனர் .