திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிக்கும் புதிய படமான ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’யை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு ரதன் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘என்னடா நடக்குது’ என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.