“திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது”… உண்மையை போட்டுடைத்த அனுஷ்கா!

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் அறிமுகமான முதல் படத்தின் ஹீரோ மாதவன். ‘இரண்டு’ என்ற இந்த படத்துக்கு சுந்தர்.சி தான் இயக்குநர். இப்படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா மொபைலா’ என்ற பாடல் தான் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு இரண்டாவது தமிழ் படமே முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அந்த படம் தான் ‘வேட்டைக்காரன்’. ‘வேட்டைக்காரன்’-க்கு பிறகு வந்த ‘சிங்கம்’ மெகா ஹிட்டானதும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி 1&2’ என படங்கள் குவிந்தது.

அனுஷ்கா ஷெட்டி தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், அனுஷ்கா ஷெட்டியின் புதிய திரைப்படமான ‘சைலன்ஸ்’ ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளியானது. இப்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் புதிய தெலுங்கு திரைப்படம் உருவாகி வருகிறது.

‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார். இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Share.