அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 6 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?
September 13, 2023 / 06:55 PM IST
|Follow Us
திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்துள்ள புதிய படமான ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’ கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இதற்கு ரதன் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.30.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus