அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடிக்கும் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ஃபர்ஸ்ட் லுக்!

  • March 1, 2023 / 08:00 PM IST

திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ‘UV கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு ரதன் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது, இந்த படத்துக்கு ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அனுஷ்கா ஷெட்டியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus