அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

  • August 21, 2023 / 07:20 PM IST

திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்துள்ள புதிய படமான ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’யை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு ரதன் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus