நவீனின் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’-க்காக அனுஷ்காவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

  • March 2, 2023 / 02:26 PM IST

திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ‘UV கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு ரதன் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

நேற்று இந்த படத்துக்கு ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus