சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.சாகுந்தலம் :
சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சாகுந்தலம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மணிஷர்மா இசையமைத்துள்ள இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.சொப்பன சுந்தரி :
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தை இயக்குநர் SG.சார்லஸ் இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி ப்ரியா, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.ருத்ரன் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ருத்ரன்’. கே.பி.திருமாறன் கதை-திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை எஸ்.கதிரேசன் தனது ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்ஸ் LLP’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார்.
இதில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சரத்குமார் நடித்துள்ளார்.
இதன் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4.திருவின் குரல் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘திருவின் குரல்’. இந்த படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.
இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார்’. இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.