தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி ஆரம்பிக்கவும், படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிடவும் ப்ளான் போடப்பட்டிருந்தது.
தற்போது, திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது, ஏற்கனவே விஜய்யை சந்தித்து முழு கதையையும் முருகதாஸ் சொல்லியிருக்கிறார். இக்கதையில் விஜய்-க்கு முதல் பாதி மட்டுமே மிகவும் பிடித்திருந்ததாம். இதன் இரண்டாம் பாதியில் சில கரெக்ஷன்ஸ் பண்ணி மீண்டும் சொல்லுங்க என்று முருகதாஸிடம் விஜய் சொல்லி விட்டாராம். சமீபத்தில், இரண்டாம் பாதியை ரீ-வொர்க் பண்ணி முருகதாஸ் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதுவும் விஜய்-க்கு பிடிக்காமல் போகவே முருகதாஸ் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.