ஏ.ஆர்.ரகுமான் வாங்கிய புதிய கார் !

  • November 25, 2022 / 12:11 AM IST

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான் . இந்த ஆண்டு இவர் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் 1 , கோப்ரா , வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது . தற்போது இவரது இசையில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது .

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது . மேலும் படத்தின் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் 1, வெந்து தணிந்தது காடு , கோப்ரா ஆகிய படங்களின் ஓ.எஸ்.டி அடுத்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார் ரகுமான் .

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் “நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus