இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், தற்போது தனது ரசிகர்களிடம் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை அவரது உடல்நலம் கவலைக்கிடமாகியுள்ளதாக மருத்துவமனையிலிருந்து செய்தி வெளியாகியது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமாகி மீண்டும் வரவேண்டுமென தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும் இறைவனிடம் பிரார்த்தித்து தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் முதல் தமிழ் நடிகர்கள் பிரசன்னா, சரத்குமார் என்று பலரும் தங்களது பிரார்த்தனை பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இவர் மீண்டு வரவேண்டும் என்று நேற்று இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “இசை ரசிகர்கள் அனைவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்தியுங்கள். இவரது குரலால் பலரையும் சந்தோஷப்படுத்தி உள்ளார்” என்று வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020