தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.
இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. இன்று (டிசம்பர் 24-ஆம் தேதி) எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இப்படத்தில் அவரின் ரோலில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படத்தின் புதிய ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
It was not just an honour to play the role of Puratchi Thalaivar MGR, but a great responsibility. I thank director A.L. Vijay & producers @vishinduri @shaaileshrsingh for having faith in me. I humbly post these pics in Thalaivar’s memory, today.#Thalaivi #MGR #ArvindSwamiasMGR pic.twitter.com/F4KY07Q4Dt
— arvind swami (@thearvindswami) December 24, 2020