விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக் மற்றும் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கன்ஃபஷன் ரூமில் “நான் பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு. நீ இங்க வந்ததுக்கு காரணம் மறந்துட்டியோ அப்படின்னு ஒரு feel. அந்த சண்டைய என் மொத்த வாழ்க்கைல பார்த்தது கிடையாது. so negative for me. இந்த வீட்ல அன்பால ஜெயிக்க முடியும் அப்படின்னு நம்பிக்கை வச்சு விளையாடினேன். but இது ரெண்டுமே இல்லாம போயிடுமோன்னு ஒரு பயம் வந்துருச்சு எனக்கு. நான் எதுக்கு வந்திருக்கேன் இங்க” என்று பிக் பாஸிடம் கூறி கதறி அழுகிறார் அர்ச்சனா. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.