‘பிக் பாஸ் 4’ : ‘ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம் குறைவா இருந்தது’ன்னு சொன்ன அர்ச்சனா… கடுப்பான அனிதா!

  • December 10, 2020 / 03:34 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ் “நான் ஆரி பிரதரை சொல்றேன். ஆரி பிரதரோட கேம் method வந்து எனக்கு interested-ஆ இல்ல” என்று சொல்கிறார்.அதற்கு ஆரி “என்ன கேம் method?” என்று கேட்கிறார்.

பின், ரியோ “break பண்றதுக்கு ஒரு method இருக்குல பிரதர். அந்த method-அ தான் நான் சொல்றேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு சோமசேகர் “ரோபோவா இருக்கும்போதும் சரி, மனிதரா இருக்கும்போதும் சரி, ஆரி கொஞ்சம் சுவாரஸ்யமே இல்லாத மாதிரி இருந்தது” என்று சொல்கிறார். பின், ஜித்தன் ரமேஷ் “நான் அனிதாவை நாமினேட் பண்றேன். சுவாரஸ்யம் ரொம்ப கம்மியா இருந்தது” என்று சொல்கிறார்.

அதன் பிறகு ஆஜித் “அனிதா அக்கா வந்து கொஞ்சம் அப்படியே உட்கார்ந்துட்ட மாதிரி எனக்கு தோணுது” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “ரோபோவா நீங்க perform பண்ணும்போது உங்களோட involvement ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம் குறைவா இருந்தது” என்று அனிதாவிடம் சொல்கிறார். அதற்கு அனிதா “accepted” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “thank you” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus