‘பிக் பாஸ் 4’ : “அதுக்கு அப்புறம் தான் அவளுக்கு புத்தி வந்துச்சு”… யாரை சொல்கிறார் அர்ச்சனா?

  • December 4, 2020 / 03:51 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா, சோமசேகர், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் நான்கு பேரும் அமர்ந்து அறந்தாங்கி நிஷா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரமேஷ் “weak-ன்னு ஒரு இதை அவளாவே தான் காமிச்சுக்குறா” என்று சொல்கிறார். அதற்கு அர்ச்சனா “saturday-ல இருந்தே pileup ஆயிட்டே போச்சு.

எல்லாத்துக்கும் கையைத் தட்டிட்டு இழுச்சிட்டு நிக்குறேல, நீ ஏன் கேக்கல அப்படின்னு நேத்து திட்டி விட்டாரு போல. அதுக்கு அப்புறம் தான் அவளுக்கு புத்தி வந்துச்சு. நான் பண்ற நகைச்சுவை நீங்க enjoy பண்ணலேனா போயிடுங்க, நகைச்சுவை நல்ல இல்ல இல்லன்னு சொல்லிட்டே இருக்காதீங்க. நம்ம பண்ற branding-ங்குறது அவங்களோட அடுத்த 5 6 வருஷத்துக்கு இருக்கும்” என்று சொல்கிறார். பின், ரமேஷ் “first time சொன்னேன் ஓகே. செகண்ட் டைம் அப்புறம் third டைம் மறுபடியும் அதே பண்ணா அவளாவே புரிஞ்சு, எப்போதான் அவளுக்கு தெரியவரும்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus