ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த தெலுங்கு ஹீரோவா?
May 16, 2023 / 09:18 PM IST
|Follow Us
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சைந்தவ்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்குகிறார்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை இந்த ஆண்டு (2023) டிசம்பர் 22-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷ் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
1999-யில் ரிலீஸான தமிழ் படம் ‘முதல்வன்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். அப்போது ஷங்கர் இந்த படத்தில் நடிக்க வெங்கடேஷை அணுகினாராம். பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக வெங்கடேஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus