‘உலக நாயகன்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… கமல் நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த அர்ஜுன்!

  • December 1, 2021 / 12:00 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர். இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர்.பா.இரஞ்சித் படம் என கமல் லைன் அப்பில் நான்கு படங்கள் இருக்கிறது.

இந்நிலையில், கமல் ஹாசன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1993-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஜென்டில் மேன்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தானாம். பின், சில காரணங்களால் கமலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus