விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
May 15, 2023 / 01:06 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், நடிகர் விஜய்-க்கு டோலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கோபிசந்த் மலினேனி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். விஜய்யின் கேரியரில் 68-வது படமான இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2007-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மருதமலை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், சுராஜின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். பின், சில காரணங்களால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus