முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2007-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மருதமலை’. இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். அப்போது சுராஜ் இப்படத்தில் நடிக்க அஜித்தை அணுகினாராம். பின், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.