அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • July 22, 2023 / 05:03 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘அநீதி’ நேற்று (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வனிதா விஜயக்குமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.32 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus