ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யில் ரிலீஸானது. அட்லி வெளியிட்ட இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கியிருந்தார். இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இவ்விரண்டு படங்களும் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்நிலையில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குநர் வசந்த பாலனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
நாயகன் pic.twitter.com/h49MwBw9jp
— Vasantabalan (@Vasantabalan1) February 12, 2021