ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இப்போது நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது. ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘அந்தகாரம்’ படத்தை OTT பிளாட்ஃபார்ம்மான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கி உள்ளாராம். இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, படத்தின் சிங்கிள் டிராக்கான ‘சுழலும் இருளில்’ வெளியிடப்பட்டுள்ளது.
The first single #SuzhalumIrulil from #Andhaghaaram out now 🔛 https://t.co/wVpioq5XMn
A #PradeepKumar musical @Atlee_dir @aforapple_offcl @PassionStudios_@priyaatlee @Sudhans2017 @iam_arjundas@vvignarajan @shahidfeels #Sivam @Jayaram_gj @vinoth_kishan @NetflixIndia pic.twitter.com/VeMGWTodLY
— Think Music (@thinkmusicindia) November 6, 2020