அர்ஜுன் தாஸ் – லாவண்யா திரிபாதி நடித்துள்ள ‘போட்டும் போகட்டுமே’ பாடல் வீடியோ!

  • May 20, 2021 / 09:30 PM IST

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யிலும், ‘மாஸ்டர்’ படம் இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளிலும் ரிலீஸானது. இவ்விரண்டு படங்களும் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது.

சமீபத்தில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்குகிறார். இந்நிலையில், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘போட்டும் போகட்டுமே’ என்ற புதிய மியூசிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. மெட்ராஸ் லோகி விக்னேஷ் இயக்கியுள்ள இப்பாடலின் வீடியோவில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus