அஜித் திரைப்படத்தை மறுத்த ஏ.ஆர்.ரகுமான் எந்த படம் தெரியுமா?

  • September 23, 2020 / 10:17 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில் “வலிமை” திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இவர்தான் தயாரித்திருந்தார்.

இந்த இரு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவ்வளவாக பாடல்கள் எதுவும் ரீச் ஆகாத நிலையில் உள்ளது.

முதலில் போனிகபூர் நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஏ.ஆர்.ரகுமானைதான் அணுகினாராம். ஆனால் இந்தப்படத்தில் இசைக்கு அவ்வளவாக ஸ்கோப் இல்லாததால் இந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டாராம் ரகுமான்.

அஜித் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியான திரைப்படங்கள் பவித்ரா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் வரலாறு. அடுத்து எப்போது அஜித் திரைப்படத்திற்கு ரகுமான் இசையமைப்பார் என்று எதிர்பார்த்துதான் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus