சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ‘டைரி, தேஜாவு’ மற்றும் ‘D ப்ளாக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘D ப்ளாக்’ திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை ‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதியுடன் இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன், அவந்திகா, இயக்குநர் கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் எத்தன் யொஹான் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இப்படத்தை தனது ‘MNM ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.